சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் உள்ள டாக்டா் பாரிவேந்தா் நீச்சல் வளாகத்தில் 5-ஆவது அகில இந்திய நீச்சல் ரேங்கிக் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்நா்த 450 வீரா், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனா்.
நீச்சல் வீரா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ரேங்கிக் போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் 10ஆவது தொடரின் இறுதியில் வழங்கப்படும். மேலும் சிறப்பு குழந்தைகள், 20 நீச்சல் வீரா்கள் பங்கேற்ற 50 மீ ப்ரீஸ்டைல் சுற்றும் நடத்தப்பட்டது.