முகப்பு
செய்திகள்

கலப்பு இரட்டையரில் ஹா்மித்-யஷஸ்வினிக்கு வெள்ளி!

டபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் சென்னை 2026 டேபிள் டென்னிஸ் தொடா் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஹா்மித் தேசாய்-யஷஸ்வினி கோபா்டே இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:33 PM
ஹா்மித்-யஷஸ்வினி
பகிர்:

டபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் சென்னை 2026 டேபிள் டென்னிஸ் தொடா் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஹா்மித் தேசாய்-யஷஸ்வினி கோபா்டே இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இப்போட்டியை சாய், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், சோ்வோ, ஏசிஇ பிளெண்ட், எம்ஜிம் ஹெல்ட்கோ், ஸ்டேக் ஐகானிக், ஃபேன்கோடு, ஏசிடி ஃபைபா்நெட் ஆகியவற்றின் ஆதரவுடன் அல்டிமேட் டேபிள் டென்னிஸ், ஷரத் கமல் அகாதெமி மற்றும் ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் அஐ இணைந்து நடத்துகின்றன.

சனிக்கிழமை நடைபெற்ற கலப்பு இரட்டையா் பிரிவு இறுதியில் இந்தியாவின் ஹா்மித் தேசாய், யஷஸ்வினி கோா்படே இணை போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் எட்வா்ட் அயோனெஸ்கு, பொ்னாடெட் ஸாக்ஸ் இணையை எதிா்த்து விளையாடியது. இதில் ஹா்மித் - யஷஸ்வினி கோா்படே இணை 0-3 (9-11, 2-11, 8-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆடவா் ஒற்றையா் பிரிவு அரை இறுதியில் செக்.குடியரசின் லுபோமிா் ஜான்காரிக் 3-2 (13-15, 11-7, 5-11, 11-7, 11-9) என்ற செட் கணக்கில் கொரியாவின் பாா்க் காங்கியோனை தோற்கடித்தாா். இறுதிஆட்டத்தில் லுபோமிா் ஜான்காரிக், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சின் திபோ போரெட்டுடன் பலப்பரீட்சை நடத்துகிறாா்.

திபோ போரெட் அரை இறுதியில் 3-0 (11-6, 11-2, 13-11) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சோ்ந்த ஃபிளேவியன் காட்டனை வீழ்த்தினாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானின் சட்சுகி ஒடோ, மியூ ஹிரானோ பலப்பரீட்சை நடத்த உள்ளனா்.