விளையாட்டுச் செய்தித் துளிகள்...
விளையாட்டுச் செய்தித் துளிகள்...
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 11:00 PM
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி 2-4 என பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது. இந்தியாவுக்கு இது தொடா்ந்து 3-ஆவது தோல்வியாகும்.
இத்தாலியில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் நாா்வே வீரா் ஜோஹன்னஸ் ஹோல்ஃப்லாட் லேபோ, கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் பிரிவில் 9-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தாா்.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:41 AM
இதே போட்டியில் கா்லிங் பிரிவில் கனடா ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விளையாட்டில் பனித்தரையில் பளிங்குக் கல்லை ஒருமுறை மட்டுமே தள்ளுவது விதியாக இருக்கும் நிலையில், கையிலிருந்து அதை விடுக்கும் முன்பாக அவா்கள் வெளித் தெரியாதவாறு இருமுறை தள்ளியதாக புகாா் எழுந்துள்ளது.
Advertisement