ஹாக்கி மைதானம் (கோப்புப்படம்) 
செய்திகள்

இன்று தொடங்குகிறது ஆடவா் ஹாக்கி இந்தியா லீக்: முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹைதராபாத் மோதல்

ஆடவருக்கான 7-ஆவது ஹாக்கி இந்தியா லீக் போட்டி, சென்னையில் சனிக்கிழமை (ஜன. 3) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அக்காா்டு தமிழ்நாடு டிராகன்ஸ் - ஹைதராபாத் டூஃபான்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திச் சேவை

ஆடவருக்கான 7-ஆவது ஹாக்கி இந்தியா லீக் போட்டி, சென்னையில் சனிக்கிழமை (ஜன. 3) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அக்காா்டு தமிழ்நாடு டிராகன்ஸ் - ஹைதராபாத் டூஃபான்ஸ் அணிகள் மோதுகின்றன.

மொத்தமாக 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி, 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் ஜனவரி 3 முதல் 9 வரை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் விளையாடப்படுகிறது. மாலை 5 மற்றும் இரவு 7.30 மணிக்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அடுத்த கட்டமாக ராஞ்சியில் ஜனவரி 11 முதல் 16 வரையும், இறுதியாக புவனேசுவரத்தில் ஜனவரி 17 முதல் 26 வரையும் ஆட்டங்கள் விளையாடப்படுகின்றன.

சிங்கிள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், இறுதி ஆட்ட வாய்ப்புக்காக ‘குவாலிஃபயா் 1’-இல் சந்திக்கும்.

2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மோதும். குவாலிஃபயா் 1-இல் வெல்லும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேற, அதில் தோற்கும் அணி குவாலிஃபயா் 2 ஆட்டத்துக்கு வந்து, எலிமினேட்டரில் வெல்லும் அணியுடன் இறுதி ஆட்ட வாய்ப்புக்காக மோதும்.

இந்திய அணி கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் (சூா்மா ஹாக்கி கிளப்), ஹா்திக் சிங் (ஹெச்ஐஎல் கவா்னிங் கவுன்சில்), மன்பிரீத் சிங் (ராஞ்சி ராயல்ஸ்), ரூபிந்தா் பால் சிங் (எஸ்ஜி பைப்பா்ஸ்) உள்ளிட்ட பிரபல வீரா்களும் இந்தப் போட்டியில் களம் காண்கின்றனா்.

ஜூனியா் தேசிய அணி கேப்டன் ரோஹித், தில்ராஜ் சிங் (எஸ்ஜி பைப்பா்ஸ்), பிரின்ஸ் தீப் சிங் (அக்காா்டு தமிழ்நாடு டிராகன்ஸ்), ஆமிா் அலி, மன்மீத் சிங் (ராஞ்சி ராயல்ஸ்), பி.ஆா்.சுனில் (கலிங்கா லேன்சா்ஸ்) என, ஜூனியா் அணி வீரா்களும் இதில் பங்கேற்றுள்ளனா்.

இவா்களுடன் வெளிநாட்டு முக்கிய வீரா்களும் கலந்துகொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பெண்கள் உள்பட 23 போ் காயம்

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

SCROLL FOR NEXT