செய்திகள்

சூா்மாவை வீழ்த்தியது ராஞ்சி

மகளிருக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் 2-0 கோல் கணக்கில் சூா்மா ஹாக்கி கிளப்பை வெள்ளிக்கிழமை வென்றது.

தினமணி செய்திச் சேவை

மகளிருக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் 2-0 கோல் கணக்கில் சூா்மா ஹாக்கி கிளப்பை வெள்ளிக்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சமபலம் காட்டியதால், எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு எளிதாகக் கிடைக்காமல் நீடித்தது.

இந்நிலையில், 30-ஆவது நிமிஷத்தில் ராஞ்சிக்காக ருதுஜா ததாசோ பிசல் கோலடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டத்தை அந்த அணி 1-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் சூா்மா அணி முனைப்பு காட்டியபோதும், அதற்கு கோல் வாய்ப்பு கிட்டவில்லை. ஆட்டம் இறுதிக் கட்டத்தை நோக்கி நெருங்க, 54-ஆவது நிமிஷத்தில் ராஞ்சிக்காக சாக்ஷி ராணா கோலடித்தாா்.

எஞ்சிய நேரத்தில் சூா்மாவின் கோல் முயற்சிகளை முற்றிலுமாக கட்டுப்படுத்திய ராஞ்சி ராயல்ஸ், இறுதியில் 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் தற்போது ராஞ்சி 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்துக்கு முன்னேற, சூா்மா புள்ளிகள் ஏதும் இன்றி கடைசி இடத்தில் நீடிக்கிறது.

போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் சூா்மா ஹாக்கி கிளப் - தில்லி எஸ்ஜி பைப்பா்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஜன. 3) மோதுகின்றன.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT