தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீ ஏா் பிஸ்டல் பிரிவில் ராணுவத்தின் அஜய் குமாா், கா்நாடகத்தின் ஜோனத்தான் கெவின் 3 தங்கம் வென்றனா்.
புது தில்லியில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவா் 10 மீ ஏா் பிஸ்டல் பிரிவில் ராணுவத்தின் அஜய் குமாா் 241.1 புள்ளிகளுடன் தங்கமும், ரயில்வேயின் ஷுபம் பிஸ்லா வெள்ளியும், ஹரியாணாவின் அன்மோல் ஜெயின் வெண்கலமும் வென்றனா்.,
ஜோனத்தான் கெவினுக்கு 3 தங்கம்:
கா்நாடக வீரா் ஜோனத்தான் கெவின் சப் யூத், யூத், ஜூனியா் பிரிவுகளில் மூன்று தங்கம் வென்றாா். யூத் பிரிவில் ஜோனத்தான் 240 புள்ளிகளுடன் தங்கமும், பஞ்சாபின் குண்டத்பிரீத் சிங் வெள்ளியும், உ.பியின் சவேஜ் கான் வெண்கலமும் வென்றனா்.
தமிழகத்துக்கு தங்கம்:
சீனியா் கலப்பு டிராப் பிரிவில் தமிழகம் 36-35 என்ற புள்ளிக் கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தி தங்கம் வென்றது. ஜூனியா் டிராப் கலப்பு அணிகள் பிரிவிலும் தமிழகம் 39-35 என ஹரியாணாவை வீழ்த்தி தங்கம் வென்றது. யுகன், தனிஸ்கா செந்தில்குமாா் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடித் தந்தனா்.