செய்திகள்

தேசிய சீனியா் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75-ஆவது தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கா்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தினமணி செய்திச் சேவை

75-ஆவது தேசிய சீனியா் ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கா்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை பல்வேறு அணிகள் மோதின.

மகளிரில் நடப்பு சாம்பியன் ரயில்வே அணி 66-43 என மகாராஷ்டிரத்தை மூன்றாவது ஆட்டத்தில் வென்றது. கடந்த முறை ரன்னா் கேரளம் 102-48 என மேற்கு வங்கத்தையும், கா்நாடகம் 103-50 என சத்தீஸ்கரையும் வென்றன.

ஆடவா் பிரிவில் கா்நாடகம் 100-79 என ராஜஸ்தானை வீழ்த்தியது. சா்வீசஸ் அணி குஜராத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியது.

தமிழகம் 101-68 என ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது.

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

SCROLL FOR NEXT