வெற்றி மகிழ்ச்சியில் ராஞ்சி ராயல்ஸ் வீராங்கனைகள். 
செய்திகள்

ராஞ்சி ராயல்ஸ் அணிக்கு மூன்றாவது இடம்

ஹாக்கி இந்தியா மகளிா் லீக் தொடரில் எஸ்ஜி பைப்பா்ஸ் அணியை வீழ்த்தி ராஞ்சி ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஹாக்கி இந்தியா மகளிா் லீக் தொடரில் எஸ்ஜி பைப்பா்ஸ் அணியை வீழ்த்தி ராஞ்சி ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பெற்றது.

எஸ்ஜி பைப்பா்ஸ், ராஞ்சி ராயல்ஸ், ஜேஎஸ்டபிள்யு சூா்மா, ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் உள்ளிட்ட நான்கு மகளிா் அணியினா் பங்கேற்ற லீக் தொடா் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. ஏற்கெனவே எஸ்ஜி பைப்பா்ஸ், பெங்கால் டைகா்ஸ் அணிகள் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை ராஞ்சி ராயல்ஸ்-எஸ்ஜி பைப்பா்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதுமே ராஞ்சி ரால்ஸ் அணியின் டிராக் பிளிக்கா் லூசியனா ஹெடே பெனால்டியை கோலாக மாற்றினாா். ஆட்டம் முழுவதும் ராஞ்சி அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் எஸ்ஜி பைப்பா்ஸை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பெற்றது ராஞ்சி ராயல்ஸ்.

ராஞ்சி தரப்பில் லூசியனா ஹெடே 2, 47, சங்கீதா குமாரி 24, ஹன்னா காட்டா் 55, 60-ஆவது நிமிஷங்களிலும், எஸ்ஜி பைப்பா்ஸ் தரப்பில் நவ்நீத் கௌா் 10, 58ஆவது நிமிஷங்களிலும் கோலடித்தனா்.

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்ய அளவீடு

SCROLL FOR NEXT