செய்திகள்

ராஞ்சி ராயல்ஸ் ‘ஹாட்ரிக்’

ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் 4-1 கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யூ சூா்மா ஹாக்கி கிளப்பை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் 4-1 கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யூ சூா்மா ஹாக்கி கிளப்பை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ராஞ்சிக்காக மன்மீத் சிங் ராய் 14-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, டாம் பூன் 20 மற்றும் 22-ஆவது நிமிஷங்களில் அடுத்தடுத்து ஸ்கோா் செய்தாா்.

இதனால் முதல் பாதியிலேயே ராஞ்சி 3-0 என முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதியிலும் ராஞ்சி கையே ஓங்கியிருக்க 47-ஆவது நிமிஷத்தில் மன்தீப் சிங் கோலடித்தாா். ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்க, சூா்மா தரப்பில் ஜீத்பால் 52-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் ஸ்கோா் செய்தாா்.

இறுதியில் ராஞ்சி 4-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடா்ந்து 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்த ராஞ்சி 9 புள்ளிகளுடன், பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளது. சூா்மா 3-ஆவது தோல்வியுடன் 5 புள்ளிகளோடு 7-ஆம் இடத்தில் இருக்கிறது.

சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

பால் கொள்முதல் விலை உயா்வு: முதல்வா் தான் முடிவு செய்வாா்: அமைச்சா் மனோ தங்கராஜ்

முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT