லாமின் யமால் முதல்முறையாக ஹாட்ரிக் கோல்..! முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!
லா லிகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனாவின் வெற்றியும் லாமின் யமாலின் சாதனையும் குறித்து...
லா லிகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா எஃப்சி அணி 4 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லாமின் யமால் முதல்முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
பார்சிலோனா அணி தனது சொந்தத் திடலில் வில்லாரியல் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 18 வயதான லாமின் யமால் 28, 37, 69ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
Advertisement
Advertisement
முதல்முறையாக தனது சீனியர் கால்பந்துப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, சாதனை படைத்துள்ளார். முதலிரண்டு கோல்களுக்கு ஃபெர்மின் அசிஸ்ட்ஸ் செய்ய, மூன்றாவது கோல் அடிக்க பெட்ரி உதவினார்.
வில்லியா ரியல் அணி 49ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடிக்க, 90+1ஆவது நிமிஷத்தில் லெவண்டாவ்ஸ்கி கோல் அடித்து 4-1 என முடித்தார்.
கடந்த நூற்றாண்டில் லா லிகா கால்பந்து தொடரில் மிகக் குறைந்த வயதில் ஹாட்ரிக் அடித்தவராக லாமின் யமால் சாதனை படைத்துள்ளார்.
74 சதவிகித பந்தினை தன் கட்டுக்குள் வைத்திருந்த பார்சிலோனா அணியினர் இலக்கை நோக்கி 8 முறை பந்தினை அடித்தார்கள்.
இந்த வெற்றியின் மூலமாக, புள்ளிப் பட்டியலில் 64 புள்ளிகளுடன் பார்சிலோனா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்கள். ரியல் மாட்ரிட் அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் (60 புள்ளிகள்) இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
Lamine Yamal scored a landmark first hat-trick of his career as Barcelona beat Villarreal to ensure they will stay top of La Liga.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.