ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தானின் எலனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
முதல்முறையாக ஆஸி. ஓபனில் ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போட்டியின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அரினா சபலென்காவும் ஐந்தாம் இடத்தில் இருக்கும் எலனா ரைபாகினாவும் மோதினார்கள்.
முதல் செட்டில் ரைபாகினா வெல்ல (6-4), இரண்டாம் செட்டில் சபலென்கா வெல்ல (4-6), ஆட்டம் சுவராசியமாகச் சென்றது.
மூன்றாவது செட்டில் 6-4 என ரைபாகினா மீண்டும் வென்று சாம்பியன் பட்டத்தை முதல்முறையாகக் கைப்பற்றினார்.
இறுதிப் போட்டியில் உலகின் நம்.1 வீராங்கனையான அரினா சபலென்கா போராடி தோல்வியுற்றார்.
இதற்கு முன்பாக ரைபாகினா 2023-ல் இறுதிப் போட்டியில் சபலென்காவிடம் தோல்வியுற்றிருந்தார். மொத்தமாக, தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ரைபாகினா வென்றுள்ளார்.
முதல்முறையாக கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் (எலனா ரைபாகினா) ஆஸி. ஓபனில் கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.