4/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நான்கு அணிகள்!
உலகக் கோப்பையில் வெளியேறிய அணிகள் நான்கு அணிகள் குறித்து...
உலகக் கோப்பை 2026ல் இதுவரை நான்கு அணிகள் வெளியேறியுள்ளன. நான்காவது அணியாக ஜோர்டன் அணி வெளியேறியது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரியா - ஜோர்டான் அணிகளுக்கான ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஜோர்டான் அணியின் நிசார் அல் ரஷ்தான் முதல் பாதியில் அடித்த கோல் மூலம் அவர்கள் முன்னிலை பெற்றனர். ஆனால், இரண்டாம் பாதியில் அல்ஜீரியாவின் ஆதிக்கத்தை அவர்களால் தடுக்க முடியாமல் போனது.
Advertisement
Advertisement
இரண்டாம் பாதியில், அல்ஜீரியா சார்பில் 69ஆவது நிமிஷத்தில் நாதிர் பென்புவாலி, 82ஆவது நிமிஷத்தில் அமின் குயிரி கோல் அடித்தார்கள்.
இந்தத் தோல்வியுடன், குரூப் ஜேவில் இடம்பெற்றுள்ள ஜோர்டான் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. முன்னதாக, துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்) ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன.
மொத்தமாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 12 குரூப்புகள் இருக்கின்றன. இதில் டாப் 2 அணிகள் (24) அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.
கடைசி இடத்தில் இருக்கும் 12 அணிகள் வெளியேறுகின்றன. பின்னர், மூன்றாமிடத்தில் இருக்கும் டாப் 8 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுகின்றன.
மீதமிருக்கும் 4 அணிகளுமாகச் சேர்த்து மொத்தமாக 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுகின்றன.
இதுவரை, துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்), ஜோர்டான் (குரூப் ஜே) ஆகிய நான்கு அணிகள் உலகக் கோப்பையில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளன.
As of June 23, 2026, four teams have been officially eliminated from the 2026 FIFA World Cup
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.