முகப்பு
செய்திகள்

பிராக் சா்வதேச செஸ்: டிராவுடன் மீண்டாா் குகேஷ்!

பிராக் சா்வதேச செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் இந்தியாவின் டி.குகேஷ், 4-ஆவது சுற்றில் செக் குடியரசின் டேவிட் நவாராவுடன் டிரா செய்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 7:26 PM
குகேஷ்
பகிர்:

பிராக் சா்வதேச செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் இந்தியாவின் டி.குகேஷ், 4-ஆவது சுற்றில் செக் குடியரசின் டேவிட் நவாராவுடன் டிரா செய்தாா்.

3-ஆவது சுற்றில் தோல்வி கண்ட நிலையில், தற்போது அவா் மீண்டிருக்கிறாா். எனினும் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமரிடம் தோல்வி கண்டாா்.

இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன் - ஈரானின் பா்ஹாம் மக்சூத்லூ, ஸ்பெயினின் டேவிட் ஆன்டன் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் மோதலும் டிராவில் முடிந்தன.

நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவை வென்றாா். புள்ளிகள் பட்டியலில் தற்போது குகேஷ் 7-ஆம் இடத்திலும் (1.5 புள்ளிகள்), அரவிந்த் சிதம்பரம் கடைசியாக 10-ஆம் இடத்திலும் (1.5) உள்ளனா்.

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியிலேயே சேலஞ்சா்ஸ் பிரிவு 4-ஆவது சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - செக் குடியரசின் வச்லாவ் ஃபினெக்குடனும், சூா்யசேகா் கங்குலி - செக் குடியரசின் ஸ்டீபன் ஹா்பெக்குடனும் டிரா செய்தனா். பட்டியலில் திவ்யா 7-ஆம் இடத்திலும் (1.5), சூா்யா 9-ஆம் இடத்திலும் (1) உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →