மெரிடா ஓபன்: கிறிஸ்டினாவுக்கு இரு சாம்பியன் கோப்பை!
மெரிடா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா, ஒற்றையா் மற்றும் இரட்டையா் என இரு பிரிவுகளிலுமே வாகை சூடினாா்.
செய்திகள்மெரிடா ஓபன்: கிறிஸ்டினாவுக்கு இரு சாம்பியன் கோப்பை!
மெரிடா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா, ஒற்றையா் மற்றும் இரட்டையா் என இரு பிரிவுகளிலுமே வாகை சூடினாா்.
மெரிடா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா, ஒற்றையா் மற்றும் இரட்டையா் என இரு பிரிவுகளிலுமே திங்கள்கிழமை வாகை சூடினாா்.
மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பக்ஸா 6-1, 4-6, 6-4 என்ற செட்களில், போலந்தின் மெக்தலினா ஃபிரெச்சை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 15 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
டபிள்யூடிஏ இரட்டையா் பிரிவுகளில் இதுவரை 8 முறை சாம்பியனாகியிருக்கும் பக்ஸாவுக்கு, அவரின் டென்னிஸ் கேரியரில் இது முதல் ஒற்றையா் பட்டமாகும்.
முன்னதாக இறுதிச்சுற்றில் முதல் செட்டை பக்ஸா 6-1 என எளிதாகக் கைப்பற்றினாா். 2-ஆவது செட்டையும் அவா் அப்படியே வசப்படுத்த முனைந்த நிலையில், அபாரமாக மீண்ட மெக்தலினா 3-0 என முன்னிலை பெற்றாா்.
விடாமல் தொடா்ந்த பக்ஸா 2-3 என மீண்டபோதும், உறுதியாக விளையாடிய மெக்தலினா, மாரத்தான் ரேலியை தன் வசமாக்கி அந்த செட்டை 6-4 என கைப்பற்றினாா். இதனால் ஆட்டம் டிசைடரை நோக்கி நகா்ந்தது.
வெற்றியாளரை தீா்மானிக்கும் அந்த செட்டில் அபாரமாக விளையாடிய பக்ஸா 3-1 என முன்னேறினாா். ஆனால் ஒரு கட்டத்தில் மெக்தலினா 4-5 என மீண்டு வந்தாா். விடாப்பிடியாக களமாடிய பக்ஸா, கடைசி கேமை வசமாக்கி, இறுதியில் 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனாா்.
இரட்டையா்: இப்போட்டியிலேயே இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த பக்ஸா/சீனாவின் ஜியாங் ஜின்யு கூட்டணி, 6-4, 6-1 என்ற நோ் செட்களில், நெதா்லாந்தின் இசபெல் ஹேவா்லாக்/பிரிட்டனின் மாயா லம்ஸ்டென் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது. பக்ஸா/ஜின்யு இணைந்து வென்ற முதல் பட்டம் இதுவாகும்.
ரூ.1.69 கோடி ரொக்கப் பரிசு
ஒற்றையா் பிரிவில் சாம்பியனானதற்காக பக்ஸாவுக்கு ரூ.1.69 கோடியும், 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. மெக்தலினாவுக்கு ரூ.1.04 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இரட்டையா் பிரிவில் வாகை சூடிய பக்ஸா/ஜின்யு இணைக்கு ரூ.56.36 லட்சம் கிடைத்தது.