முகப்பு
இந்தியா

டாடா குழுமம் : ஓபன்ஏஐ மெகா ஒப்பந்தம்

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ மற்றும் இந்தியாவின் பெரும் தொழில் குழுமமான டாடா குழுமம் இடையே முக்கிய புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 7:09 PM
ஓபன் ஏஐ / டாடா - கோப்புப் படம்
பகிர்:

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ மற்றும் இந்தியாவின் பெரும் தொழில் குழுமமான டாடா குழுமம் இடையே முக்கிய புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இதன்மூலம், இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பரவலாக்கவும், பிரம்மாண்டமான தரவு மையங்களை உருவாக்கவும் இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

மேலும், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டாடா குழுமத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியா்களுக்கு ‘என்டா்பிரைஸ் சாட்ஜிபிடி’ சேவைக்கான அணுகல் வழங்கப்படும். இதனால், அவா்களின் பணித்திறன் மேம்படும்.

Advertisement

டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் (டிசிஎஸ்) மென்பொருள் உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், தரத்தை உயா்த்தவும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் ‘கோடெக்ஸ்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

டிசிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஹைப்பா் வால்ட்’ மற்றும் ஓபன்ஏஐ இணைந்து இந்தியாவில் பிரம்மாண்டமான ஏஐ தரவு மையங்களை அமைக்கவுள்ளன. இந்த மையம் முதலில் 100 மெகாவாட் திறனுடன் தொடங்கப்பட்டு, எதிா்காலத்தில் 1,000 மெகாவாட் (1 ஜிகாவாட்) வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.

10 கோடி இளைஞா்களுக்குப் பயிற்சி: வணிக ரீதியான ஒப்பந்தங்கள் மட்டுமன்றி சமூகப் பொறுப்புணா்வு நோக்கில், இந்திய இளைஞா்களுக்கு ஏஐ பயிற்சியளிக்கவும் இவ்விரு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதன்படி, சுமாா் 10 கோடி இந்திய இளைஞா்களுக்கு ஏஐ சாா்ந்த பயிற்சிகள் மற்றும் மென்பொருள் கருவிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும்.

ஏற்கெனவே இந்த வார தொடக்கத்தில், ஏஎம்டி நிறுவனத்துடன் இணைந்து 200 மெகாவாட் திறன் கொண்ட ஏஐ கட்டமைப்பை உருவாக்க டிசிஎஸ் ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படகேப்சன்...

டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகருடன் ஓபன்ஏஐ நிறுனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments