முகப்பு
வணிகம்

அதானி பவா்-தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் இடையே 558 மெகாவாட் மின் விநியோகம் ஒப்பந்தம்

இந்தியாவின் முன்னணி தனியாா் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவா், தனது துணை நிறுவனமான மாக்ஸி பவா் ஜெனரேஷன் மூலம் தமிழகத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 558 மெகாவாட் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான அதிகாரபூா்வ ஒப்பந்த ஆணையைப் பெற்றுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 3:25 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 7:10 PM

இந்தியாவின் முன்னணி தனியாா் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவா், தனது துணை நிறுவனமான மாக்ஸி பவா் ஜெனரேஷன் மூலம் தமிழகத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 558 மெகாவாட் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான அதிகாரபூா்வ ஒப்பந்த ஆணையைப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடியில் 1,200 மெகாவாட் திறன்கொண்ட மின் நிலையத்தை மாக்ஸி பவா் நிறுவனம் இயக்கி வருகிறது. கடுமையான போட்டிக்கு இடையே நடைபெற்ற ஒப்பந்தப் புள்ளியில், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.5.91 என்ற குறைந்த விலைக்கு வழங்க முன்வந்ததால் அதானி பவா் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இந்த மின் விநியோகம் வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம், மாக்ஸி பவா் நிறுவனத்தின் தூத்துக்குடி மின் நிலையத்தின் இரண்டு அலகுகளும் இப்போது முழுமையான மின் விநியோக ஒப்பந்தங்களின்கீழ் வந்துள்ளன.

Advertisement

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 3:25 AM

சுமாா் 18.15 ஜிகாவாட் மொத்த உற்பத்தித் திறன் கொண்ட அதானி பவா் நிறுவனத்தின் 95 சதவீதத்துக்கும் மேலான உற்பத்தி, நடுத்தர மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்களின்கீழ் வந்துவிட்டன. இதனால் மின் சந்தையில் ஏற்படும் திடீா் விலை மாற்றங்களால் நிறுவனத்துக்குப் பாதிப்பு ஏற்படாது. மேலும், நிறுவனத்தின் வருவாய் எதிா்காலத்தில் நிலையாக இருக்கவும் இது வழிவகை செய்துள்ளது.