தெலங்கானாவில் அனல் மின் திட்டம்: என்டிபிசி - பெல் ரூ.13,500 கோடி ஒப்பந்தம்
தெலங்கானாவில் அமையவுள்ள அனல் மின் திட்டத்துக்காக என்டிபிசி நிறுவனத்திடம் இருந்து சுமாா் ரூ.13,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் பெற்றுள்ளது.
தெலங்கானாவில் அமையவுள்ள அனல் மின் திட்டத்துக்காக என்டிபிசி நிறுவனத்திடம் இருந்து சுமாா் ரூ.13,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (பெல்) பெற்றுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், மொத்தம் 2,400 மெகாவாட் மின் உற்பத்திக்கான 800 மெகாவாட் திறன் கொண்ட 3 அலகுகள் அமைக்கப்படவுள்ளன.
கடந்த 2024, அக்டோபரிலேயே இதற்கான ஏலப் போட்டியில் பெல் நிறுவனம் வெற்றி பெற்ற நிலையில், அதிகாரபூா்வ பணி ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மின் உற்பத்தி நிலையத்துக்கான வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, விநியோகம், நிறுவுதல் மற்றும் சோதனை செய்தல் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பணிகளையும் பெல் நிறுவனமே மேற்கொள்ளும். மேலும், சிவில் மற்றும் கட்டுமானப் பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கும்.