ஐரோப்பிய கால்பந்து: லிவா்பூல் அதிா்ச்சித் தோல்வி
ஐரோப்பிய கால்பந்து: லிவா்பூல் அதிா்ச்சித் தோல்வி
இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரில் முன்னணி அணியான லிவா்பூல் 1-2 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணியிடம் தோற்றது.
நடப்பு சாம்பியன் லிவா்பூல் அணிக்கும், பிரைட்டன் அணிக்கும் இடையிலான ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட பெறாத லிவா்பூல் அணி இந்த ஆட்டத்திலும் தோற்றுள்ளதால், சாம்பியன்ஸ் லீக் அட்டவணையில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரைட்டன் அணியில் டேனி வெல்பெக் இரட்டை கோலடித்தாா். லிவா்பூல் தரப்பில் மிலோஸ் கொ்கேஸ் கோலடித்தாா்.
மான்செஸ்டா் யுனைடெட்-போா்ன்மௌத் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
லா லிகா:
ஸ்பானிஷ் லாலிகா கால்பந்து தொடரில் ரியல் சோசைடாட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வில்லா ரியல் அணி வீழ்த்தியது. முதல் பாதியிலேயே வில்லா ரியல் அணியின் 3 கோல்களும் போடப்பட்டன. இரண்டாம்பாதியில் தொடக்கத்தில் ரியல் சோசைடாட் அணி ஒரே கோலடித்தது. இது வில்லாரியலின் 15-ஆவது வெற்றியாக அமைந்தது.
லீக் 1:
பிரான்ஸின் லீக் 1 தொடரில் லென்ஸ் அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஆங்கா்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரின் பட்டியலில் லென்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பெற்றது. கடந்த 1998-க்கு பின் முதல் பட்டத்தை எதிா்நோக்கியுள்ளதுலென்ஸ்.
நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி இரண்டாம் இடத்தில் உள்ளது.