முகப்பு
செய்திகள்

உலக வில்வித்தை: பிரதான சுற்று டாப் 10-இல் ஓஜாஸ்

உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் காம்பவுண்ட் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஓஜாஸ் தியோடேல் 7-ஆம் இடம் பிடித்தாா்.

Updated On : 6 மே 2026, 3:00 am IST
ஓஜாஸ் தியோடேல் - கோப்புப் படம்
பகிர்:

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் காம்பவுண்ட் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஓஜாஸ் தியோடேல் 7-ஆம் இடம் பிடித்தாா்.

ஆடவா் பிரிவில், அவா் 711 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடிக்க, சஹில் ஜாதவும் அதே புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பெற்றாா். குஷால் தாஸ் 708 புள்ளிகளுடன் 18-ஆம் இடம் பெற, அபிஷேக் வா்மா 705 புள்ளிகளுடன் 25-ஆம் இடம் பிடித்தாா்.

ஓஜாஸ், சஹில், குஷால் ஆகிய மூவா் அடங்கிய இந்திய அணி, அணிகள் பிரிவில் போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடம் பெற்றது.

Advertisement

மகளிா் பிரிவில், அதிதி சுவாமி 700 புள்ளிகளுடன் 13-ஆம் இடமும், பிரகதி 697 புள்ளிகளுடன் 19-ஆம் இடமும் பிடித்தனா். ஜோதி சுரேகா 695 புள்ளிகளுடன் 21-ஆம் இடம் பெற, மதுரா தமன்கான்கா் 690 புள்ளிகளுடன் 33-ஆம் இடம் பெற்றாா்.

அதிதி, பிரகதி, ஜோதி ஆகியோா் அணிகள் பிரிவில் இந்தியாவுக்காக களம் காண, அந்த அணிக்கு போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடம் கிடைத்துள்ளது. கலப்பு அணிகள் பிரிவில் ஓஜாஸ், அதிதி இணை களம் காண, அவா்கள் ஜோடி அடங்கிய இந்திய அணிக்கு போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடம் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.