டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு மார்டின் கப்தில் மற்றும் டேரின் மிட்செல் நல்ல தொடக்கத்தையே தந்தனர்.
மிட்செல் 17 ரன்கள் எடுத்து முஜீப் உர் ரஹ்மான் சுழலில் ஆட்டமிழந்தார். கப்தில் 28 ரன்களுக்கு ரஷித் கான் சுழலில் வீழ்ந்தார்.
இதன்பிறகு, கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்தனர்.
18.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் 2-வில் இருந்து பாகிஸ்தானைத் தொடர்ந்து நியூசிலாந்தும் 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.