டி20 உலகக் கோப்பை

நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள்: டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாதனை படைத்த இளம் வீரர்

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அயர்லாந்தைச் சேர்ந்த 22 வயது கர்டிஸ் கேம்பர், நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். 

அபுதாபியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

22 வயது கர்டிஸ் கேம்பர், 9-வது ஓவரை வீசினார். அப்போது நெதர்லாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது பந்தில் காலினை 11 ரன்களில் வீழ்த்தினார் கர்டிஸ் கேம்பர். பிறகு அடுத்த மூன்று பந்துகளிலும் விக்கெட்டுகள் எடுத்தார். ஹாட்ரிக் சாதனையுடன் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய கர்டிஸ் கேம்பர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் அயர்லாந்து வீரர் என்கிற பெருமையை அடைந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிரெட் லீ-க்கு (2007 ) அடுத்ததாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

சர்வதேச டி20: நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள்

ரஷித் கான் vs அயர்லாந்து, 2019
மலிங்கா vs நியூசிலாந்து, 2019
கர்டிஸ் கேம்பர் vs நெதர்லாந்து, 2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT