டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வென்றது இந்தியா

இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

DIN

இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் அடித்தது. அடுத்து இந்தியா 19 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து இன்னிங்ஸில் ஜேசன் ராய் 17 ரன்களுக்கு வெளியேற, பட்லா் 18 ரன்கள் சோ்த்தாா்.

டேவிட் மலானும் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜானி போ்ஸ்டோ கடைசி விக்கெட்டாக 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். முன்னதாக, லியாம் லிவிங்ஸ்டன் 30 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

ஓவா்கள் முடிவில் மொயீன் அலி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 43 ரன்கள் விளாசியும், கிறிஸ் வோக்ஸ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் சாய்க்க, ஜஸ்பிரீத் பும்ரா, ராகுல் சஹா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆடிய இந்தியாவில் கே.எல்.ராகுல் அதிரடியாக 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாச, இஷான் கிஷணும் தனது பங்கிற்கு 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 70 ரன்களை எட்டினாா்.

கேப்டன் விராட் கோலி 11, சூா்யகுமாா் யாதவ் 8 ரன்களுக்கு வெளியேற, ரிஷப் பந்த் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 29, ஹாா்திக் பாண்டியா 12 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனா்.

இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி, மாா்க் வுட், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

முன்னதாக, இந்த ஆட்டத்துக்கான இந்திய பிளேயிங் லெவனில் பரீட்சாா்த்த முறையில் இன்னிங்ஸ் தொடக்க வீரா்களாக கே.எல்.ராகுல் - இஷான் கிஷண் களம் கண்டனா். ஆட்டத்துக்கு முன்பாக பேசிய கேப்டன் கோலி, பிரதான ஆட்டங்களில் ரோஹித்துடன் இணைந்து கே.எல்.ராகுலே இன்னிங்ஸை தொடங்குவாா் என்றும், தாம் 3-ஆவது வீரராக களமிறங்க இருப்பதாகவும் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT