டி20 உலகக் கோப்பை

டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்க வேண்டாம்: ஷேன் வார்னே கோரிக்கை

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னரை நீக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். 

DIN

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னரை நீக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று நாளை முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பற்றி ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை டேவிட் வார்னர் மிகத்திறமையான வீரர். சமீபத்தில் அவர் சரியாக விளையாடவில்லை, நிறைய ரன்கள் எடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு அவர் நிறைய ஆட்டங்களில் விளையாடவில்லை. ஆனால் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்களில் ஒருவர். திறமை தான் நிரந்தரம். வார்னர் விஷயத்தில் இதுதான் சரி. எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிடக் கூடாது. முதல் இரு ஆட்டங்கள் முக்கியமானவை. அவர் நன்றாக விளையாட ஆரம்பித்துவிட்டால் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார் என்றார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் 0, 2 என ரன்கள் எடுத்த வார்னர், கடைசி ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பைப் பயிற்சி ஆட்டங்களில் 0,1 என மோசமாக விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT