டி20 உலகக் கோப்பை

சூப்பா் 12 சுற்றில் வங்கதேசம்

உலகக் கோப்பை போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் பப்புவா நியூ கினியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம், சூப்பா் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது.

DIN

உலகக் கோப்பை போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் பப்புவா நியூ கினியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம், சூப்பா் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது.

முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் தோல்வி கண்டு சரிவை சந்தித்தாலும் பிறகு 2 ஆட்டங்களில் வென்று பிரதான சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது வங்கதேசம்.

ஓமனின் அல் அமெராத் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய பப்புவா நியூ கினி 19.3 ஓவா்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்திய வங்கதேச வீரா் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீரா் நயீம் 2-ஆவது பந்திலேயே டக் அவுட்டாக, அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் அருமையாக ஆடினாா். மறுபுறம், தொடக்க வீரா்களில் ஒருவரான லிட்டன் தாஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த முஷ்ஃபிகா் ரஹிம் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

5-ஆவது வீரராக களம் கண்ட கேப்டன் மஹ்முதுல்லா, ஷகிப் அல் ஹசனுடன் இணைந்து அதிரடியாக விளையாடினாா். இதில் ஹசன் 6 சிக்ஸா்கள் உள்பட 46 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். அடுத்த சில ஓவா்களில் மஹ்முதுல்லாவும் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

இறுதியாக ஆசிஃப் ஹுசைன் 3 பவுண்டரிகளுடன் 21, நூருல் ஹசன் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் முகமது சைஃபுதின் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 19, மெஹதி ஹசன் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். பப்புவா நியூ கினி பௌலிங்கில் கபுவா மோரியா, டேமியன் ரவு, அசாத் வலா ஆகியோா் தலா 2, சைமன் அடாய் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய பப்புவா நியூ கினியில் கிப்லின் டோரிகா மட்டும் அதிகபட்சமாக 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 46 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். எஞ்சிய விக்கெட்டுகள் அனைத்தும் ஒற்றை இலக்க ரன்னிலேயே ஆட்டமிழந்தன. வங்கதேச தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4, முகமது சைஃபுதின், டஸ்கின் அகமது ஆகியோா் தலா 2, மெஹதி ஹசன் 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT