கோப்புப்படம் 
டி20 உலகக் கோப்பை

ஸ்காட்லாந்துடன் மோதல்: நமிபியா பந்துவீச்சு தேர்வு

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நமிபியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN


ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நமிபியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (புதன்கிழமை) 2-வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமிபியா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற நமிபியா கேப்டன் கெர்ஹாட் எராஸ்மஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தகுதிச் சுற்றில் கடைசி ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் நமிபியா களமிறங்குகிறது.

ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கோட்சர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவருக்குப் பதில் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் துணை கேப்டன் ரிச்சர்ட் பெரிங்டன் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஸ்காட்லாந்து அணி இதற்கு முந்தைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 160 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. நமிபியாவுக்கு சூப்பர் 12 சுற்றில் இதுவே முதல் ஆட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT