டி20 உலகக் கோப்பை

எந்த அணி வெளியேறப் போகிறது?: வங்கதேசத்துக்கு எதிராக மே.இ. தீவுகள் முதலில் பேட்டிங்

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியை இருமுறை வென்ற ஒரே அணி மேற்கிந்தியத் தீவுகள். நடப்பு சாம்பியனாக இருந்தபோதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இரு தோல்விகளுடன் இக்கட்டான நிலைமையில் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்த மே.இ. தீவுகள் அணி, 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ரன்ரேட் காரணமாக வங்கதேசம் மே.இ. தீவுகளை விடவும் ஒரு படி மேலே இருக்கிறது.

ஷார்ஜாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால் இந்த ஆட்டத்தில் இன்னொருமுறை தோல்வியடையும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும். எனவே நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி கட்டாயமாக ஜெயிக்கவேண்டிய நிலையில் உள்ளது.

டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் தலா இரு மாற்றங்கள். வங்கதேச அணியில் செளம்யா சர்காரும் டஸ்கினும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மே.இ. தீவுகள் அணியில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டுள்ளார். ராஸ்டன் சேஸ் டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். ஹேடன் வால்ஷுக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டர் அணியில் இடம்பிடித்துள்ளார். கிறிஸ் கெயில் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என கேப்டன் பொலார்ட் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT