ஜாஸ் பட்லர் அதிரடி: இங்கிலாந்து அபார வெற்றி 
டி20 உலகக் கோப்பை

ஜாஸ் பட்லர் அதிரடி: இங்கிலாந்து அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டம் துபையில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 

எனினும் ஃபின்ச் நிதானமாக ஆடி 49 பந்துகளில் 44 ரன்களை சேர்த்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீவன் ஸ்மித் (1), மேக்ஸ்வெல் (6), ஸ்டோனிஸ் (0) ஆகியோர் சொற்ப ரன்களியேலேயே  ஆட்டமிழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் 22 ரன்களையும், ஜாஸ் பட்லர் 32 பந்துகளில் 71 ரன்களையும் குவித்தனர்.

ஜேசன் ராயிக்கு அடுத்து களமிறங்கிய டாவிட் மிலன் 8 ரன்களை எடுத்து வெளியேற அடுத்து வந்த பேர்ஸ்டோவ் 16 ரன்களை எடுத்தார். 

ஜாஸ் பட்லரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 11.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT