அரையிறுதி கணக்கு: தென் ஆப்பிரிக்கா முன்னேறுமா? இங்கிலாந்து வெளியேறுமா?
டி20 உலகக் கோப்பையின் குரூப் 1 பிரிவிலிருந்து அரையிறுதி வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
டி20 உலகக் கோப்பையின் குரூப் 1 பிரிவிலிருந்து அரையிறுதி வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிக்க | இங்கிலாந்துக்கு எதிராக 189 ரன்கள் குவிப்பு: அரையிறுதிக்குள் நுழையுமா தென் ஆப்பிரிக்கா
இந்த நிலையில், அரையிறுதிக்கு முன்னேறுவதற்குத் தேவையான ரன் ரேட் விவரங்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து:
- இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி குறைந்தபட்சம் 87 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையெனில் நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.
- இங்கிலாந்து 106 ரன்கள் எடுத்தால், குரூப் 1-இல் முதலிடத்தைக் தக்கவைக்கும்.
தென் ஆப்பிரிக்கா:
- தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்தை 131 ரன்கள் அல்லது அதற்கும் குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் வெற்றி பெற்றாலும்கூட நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.