இலங்கையை நொறுக்கிய ஸ்டாய்னிஸ்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸின் மிரட்டல் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பைஇலங்கையை நொறுக்கிய ஸ்டாய்னிஸ்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸின் மிரட்டல் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸின் மிரட்டல் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதல் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க | கடைசி ஓவரில் 20 ரன்கள்: இலங்கைக்கு உதவுமா?
158 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இலங்கைப் பந்துவீச்சாளர்களின் மிரட்டலில் ஃபிஞ்ச் திணறியதால், ரன் உயரவில்லை.
இந்த நெருக்கடியில் டேவிட் வார்னர் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, மகேஷ் தீக்ஷனா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, மிட்செல் மார்ஷும் சற்று திணறியதால், இலங்கையின் கை சற்று ஓங்கியிருந்தது.
அவர் 17 ரன்கள் எடுத்திருந்தபோது, தனஞ்ஜெயா டி சில்வா சுழலில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், நெருக்கடியை அப்படியே இலங்கை பக்கம் திருப்பினார். இலங்கையின் முக்கியப் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கா ஓவரில் மேக்ஸ்வெல், 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாச, ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திணறியது.
எனினும், அடுத்த 2 ஓவர்களில் இலங்கை மீண்டும் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்தனர். இந்த 2 ஓவர்களில் மொத்தம் 3 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி எடுத்தது.
இந்த நெருக்கடியில் சிக்ஸர் அடிக்க முயன்று, சமிகா கருணாரத்னே பந்தில் ஆட்டமிழந்தார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல் 12 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார்.
இதன்பிறகு, மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டத்தை மீண்டும் ஆஸ்திரேலியா பக்கம் இழுத்தார். இலங்கைால் இதிலிருந்து மீள முடியவில்லை.
தசுன் ஷனாகா வீசிய 14-வது ஓவரில், ஸ்டாய்னிஸுக்கு அதிர்ஷ்டவசமாக 2 பவுண்டரிகள் கிடைத்தது.
முதலிரண்டு ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்திருந்தாலும், ஹசரங்கா மீது நம்பிக்கை வைத்து 15-வது ஓவரை அவரிடம் கொடுத்தார் ஷனாகா.
அந்த ஓவரில் ஸ்டாய்னிஸ் 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார்.
முதிலரண்டு ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து, வார்னர் விக்கெட்டையும் வீழ்த்திய தீக்ஷனாவிடம் அடுத்த ஓவரை கொடுத்தார் ஷனாகா.
அந்த ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஸ்டாய்னிஸ். இந்த அதிரடி மூலம், 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் ஸ்டாய்னிஸ். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதத்தை எட்டியவர் என்ற சாதனையை ஸ்டாய்னிஸ் படைத்தார்.
பிறகு, மீண்டும் நம்பிக்கைப் பந்துவீச்சாளரான லஹிரு குமாராவிடம் கொடுத்தார் ஷனாகா. இந்த ஓவரிலும் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு, ஆட்டத்தை இந்த ஓவரிலேயே முடிக்க உதவினார் ஸ்டாய்னிஸ்.
16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபிஞ்ச் 42 பந்துகளில் 31 ரன்களும், ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர்.
சூப்பர் 12 சுற்று குரூப் 1-இல் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் தலா 2 ஆட்டங்களில் விளையாடி தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு மேல் உள்ளது.