முகப்பு
கோப்புப்படம்
டி20 உலகக் கோப்பை

ஸாம்பாவுக்கு கரோனா: இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை

ஸாம்பாவுக்கு கரோனா: இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பெர்த்தில் விளையாடுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளபோதிலும், பெர்த்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஆனால், அணித் தேர்வுக்கு அவர் கருத்தில் கொள்ளப்படுவார் என்றே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை விதிமுறைப்படி, வீரருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவர் போட்டியில் பங்கேற்கலாம். 

முன்னதாக, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின்போது அயர்லாந்து வீரர் ஜார்ஜ் டாக்ரெலுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மற்ற வீரர்களுடன் இணையாமல் தனித்து பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டார்.

ஒருவேளை, இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் விளையாடும் லெவனில் ஸாம்பா இடம்பிடித்தால், அவரும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →