வங்கதேச வீரர் டஸ்கின் அகமது படம்: இன்ஸ்டா / டஸ்கின் அகமது
டி20 உலகக் கோப்பை

தாமதமாக வரவில்லை: அணியில் சேர்க்காதது குறித்து வங்கதேச வீரர் மாற்று கருத்து!

டி20 உலகக் கோப்பையில் தாமதமாக வந்ததாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நீக்கப்பட்டது குறித்து வங்கதேச வீரர் மாற்று கருத்து.

DIN

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்துடன் ஜூன் 22இல் நடைபெற்ற போட்டியில் இந்தியா 196/5 ரன்கள் எடுக்க வங்கதேசம் 146/8 ரன்கள் எடுத்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதில் முக்கியமான வீரர் டஸ்கின் அகமது விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜேகர் அலி விளையாடினார்.

தாமதமாக வந்ததால் போட்டியில் தேர்வாகவில்லை எனக் கூறப்பட்டதுக்கு டாகா செய்திதாளுக்கு அளித்த பேட்டியில் டஸ்கின் அகமது மறுப்பு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் டஸ்கின் கூறியதாவது:

நான் அணியின் பேருந்தில் ஏறுவதில் சற்று தாமதம் ஆகிவிட்டது. ஆனால் டாஸ் போடுவதற்கு 30-40 நிமிடம் முன்பாகவே மைதானத்துக்கு வந்துவிட்டேன். பேருந்து 8.35க்கு கிளம்பியது. நான் அதை தவறவிட்டாலும் மைதானத்துக்கு 8.43 மணிக்கே வந்துவிட்டேன். கிட்டதட்ட பேருந்துடனே நான் மைதானத்துக்கு வந்துவிட்டேன். நான் தாமதாக வந்ததால் என்னை அணியில் எடுக்கவில்லை என்பது பொய். எப்படியும் நான் விளையாடபோவதில்லை எனக் கூறியுள்ளார்.

வங்கதேச கேப்டன் ஹகிப் அல் ஹாசன், “ அணியின் பேருந்து யாருக்காகவும் காத்திருக்காது. அது சரியான நேரத்துக்கு கிளம்பிவிடும். டஸ்கின் 5-10 நிமிடத்துக்கு முன்பாகவே மைதானத்துக்கு வந்தார். அதனால் அணி நிர்வாகம் அவரை தேர்வது செய்வது கடினம்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் யார் உண்மை பேசுகிறார்கள் எனப் புரியவில்லை என வங்கதேச வீரர்களே குழம்பியுள்ளார்கள்.

இது குறித்து விரைவில் விசாரணை நடைபெறுமென வங்கதேச தேர்வுக்குழு தலைவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காவல்துறை புதிய ஆணையராக சிறைத்துறை டிஜிபி கோல்ச்சா நியமனம்: மத்திய உள்துறை உத்தரவு

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

தெருநாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்

மாவட்ட ஹாக்கிப் போட்டி: கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி

குறுக்குச்சாலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT