இந்திய அணி வீரர்கள்  படம் | பிசிசிஐ (எக்ஸ்)
டி20 உலகக் கோப்பை

இந்திய அணி வீரர்கள் எந்தெந்த இடங்களில் களமிறங்க வேண்டும்; முன்னாள் வீரர் கருத்து!

அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும்.

DIN

அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் நாளை நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும். அவர்களைத் தொடர்ந்து, 3-வது வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் 4-வது வீரராகவும், ரிஷப் பந்த் 5-வது வீரராகவும் களமிறங்க வேண்டும். 6-வது இடத்தில் ஹார்திக் பாண்டியாவும், 7-வது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், 8-வது இடத்தில் ஷிவம் துபேவும் களமிறங்க வேண்டும். குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் முறையே 9,10 மற்றும் 11-வது வீரர்களாக களமிறங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

SCROLL FOR NEXT