இமாத் வாசிம் (கோப்புப்படம்) 
டி20 உலகக் கோப்பை

முதல் போட்டியை தவறவிடும் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர்!

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் விளையாட மாட்டார் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

DIN

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் விளையாட மாட்டார் என அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நாளை (ஜூன் 6) நடைபெறும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரைரி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் விளையாட மாட்டார் என அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் இமாத் வாசிம் அமெரிக்காவுக்கு எதிரான நாளையப் போட்டியில் விளையாட மாட்டார். பாகிஸ்தான் அணியின் மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார்.

டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அண்மையில் இமாத் வாசிம் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT