டி20 உலகக் கோப்பையில் ஓமன்- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற ஓமன் பௌலிங்கினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 164/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஓமன் அணி 20 ஓவர் முடிவில் 125 /9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 56 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் டி20யில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட் போட்டியில் 50க்கும் அதிகமான ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் வார்னர்.
டேவிட் வார்னர் - 111 முறை
கிறிஸ் கெயில் - 110 முறை
விராட் கோலி - 105 முறை
மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார் வார்னர். ஆஸ்திரேலியாவுக்காக அதிகமான டி20 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஆரோன் ஃபின்ச்சை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
டேவிட் வார்னர் -3155
ஆரோன் ஃபின்ச் - 3120
கிளென் மேக்ஸ்வெல் - 2468
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.