படம் |AP
டி20 உலகக் கோப்பை

பாகிஸ்தானுக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கனடா!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கனடா 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கனடா 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூயார்க்கில் நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கனடா முதலில் பேட் செய்தது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்சன் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கலீம் சனா அதிகபட்சமாக 13 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் மற்றும் ஹாரிஸ் ரௌஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷகின் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT