அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவது மழை காரணமாக தாமதமாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஃபுளோரிடாவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஃபுளோரிடாவில் மழை பெய்து வருவதால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். ஆட்டம் மழையினால் தடைபட்டு இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டால், பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் கனவு தகர்ந்துவிடும்.
பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் நம்பிக்கை உயிர்ப்புடன் இருக்க, இன்று போட்டி நடைபெற்று அதில் அயர்லாந்து அணி வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் அணி அதன் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.