படம் | AP
டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகும் பிரபல ஆப்கன் சுழற்பந்துவீச்சாளர்!

காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகல்.

DIN

காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. அந்த அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நாளை மறுநாள் (ஜூன் 17) அதன் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உகாண்டாவுக்கு எதிரான போட்டியின்போது முஜீப் உர் ரஹ்மானுக்கு அவரது வலது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. தற்போது, அவர் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அணியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேனான ஹஸ்ரதுல்லா ஸஸாய் அந்த அணிக்காக 43 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT