படம்: எக்ஸ்/ ஐசிசி
டி20 உலகக் கோப்பை

1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்த நேபாளம்! வைரல் விடியோ!

டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 1 ரன் வித்தியாசத்தில் நேபாள அணி தோற்றது.

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் 31ஆவது ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நேபாளம் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 115/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீஜா ஹெண்ட்ரிக்ஸ் 43 ரன்கள், ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்தார்.

நேபாளம் சார்பில் குஷால் புர்டேல் 4 விக்கெட்டுகளும் திபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய நேபாளம் அணியின் தொடக்க வீரர் ஆசிஃப் ஷெயிக் 42 ரன்கள் எடுத்தார். அனில் ஷா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை:

முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் இல்லை. 3ஆவது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்து ரன் இல்லை. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவையாக இருக்கும்போது ரன் அவுட் ஆகி தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேபாளம் இந்த்ப் போட்டியில் வென்றிருந்தால் சூப்பர் 8 வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறது. மீதமிருக்கும் ஒரு போட்டியில் வென்றாலும் பலனில்லை. ஆனால் தெ.ஆ. போன்ற வலுவான அணியிடன் போராடி தோற்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தெ,ஆ. வீரர் ஷம்ஸி 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT