Ramon Espinosa
டி20 உலகக் கோப்பை

நமது விதி நம்முடைய கைகளில்தான் இருக்கிறது!

சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்தது குறித்து மே.இ.தீ. அணித் தலைவர் பேசியதாவது...

DIN

சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்தது குறித்து மே.இ.தீ. அணித் தலைவர் பேசியது கவனம் பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 180/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 17.3 ஓவரில் 181/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்தத் தோல்வி குறித்து மே.இ.தீ. அணியின் தலைவர் ரோவ்மன் பவல் கூறியதாவது:

பேட்டிங்கினைப் பொறுத்தவரை நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பந்து வீச்சாளர்களாக நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பான செயல்பாடுகளை அளித்திருக்கலாம். பேட்டிங்கில் கடைசி 5 ஓவர்களில் எங்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். பிராண்டன் கிங்குக்கு ஏற்பட்ட காயம் எதிர்பாராதது. ஆனால் அடுத்த போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார் என நம்புகிறேன்.

பிலிப் சால்ட் எங்களுக்கு எதிராக விளையாடும்போதெல்லாம் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். சால்ட்டுக்கு எதிராக எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை.

நமது விதி நம்முடைய கைகளில்தான் இருக்கிறது. நாங்கள் நல்ல விதமான கிரிக்கெட்டினை தொடர்ந்து விளையாடி வெற்றி பெற்றாக வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT