டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 180/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 17.3 ஓவரில் 181/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மே.இ.தீ. அணி சார்பில் பிராண்டன் கிங் - 23, சார்லஸ் - 38, பூரண் - 36, ரோவ்மன் பவல் - 36, ரூதர்ஃபோர்டு - 28*, ரஸ்ஸல் -1, ரொமாரியோ ஷெபார்டு-5* ரன்களும் எடுத்தார்கள்.
இங்கிலாந்து சார்பில் பிலிப் சால்ட் - 87*, ஜாஸ் பட்லர் - 25, மொயின் அலி - 13, ஜானி பெயர்ஸ்டோ -48* ரன்களும் எடுத்தார்கள்.
பிலிப் சால்ட் 47 பந்துகளில் 87 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
குரூப் 2 பிரிவில் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இங்கிலாந்தும் ஒரு போட்டியில் வென்றுள்ளது. அமெரிக்கா, மே.இ.தீ. தோல்வியை சந்தித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.