நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ படம் | AP
டி20 உலகக் கோப்பை

இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம்; வங்கதேச கேப்டன் நம்பிக்கை!

சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் வங்கதேசம் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: அடுத்த இரண்டு போட்டிகள் மிகவும் முக்கியமானது. அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றால், வங்கதேச அணி நல்ல நிலையில் இருக்கும். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடுவோம். சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்காமல் விளையாட வேண்டும் என்றார்.

சூப்பர் 8 சுற்றின் அடுத்தப் போட்டியில் வங்கதேசம் இந்திய அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT