விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கன் வீரா்கள்  
டி20 உலகக் கோப்பை

ஆஸி.க்கு அதிா்ச்சி அளித்தது ஆப்கன்! குல்பதின் நைப் அதிரடி 4 விக்கெட் ; கம்மின்ஸ் 2-ஆவது ஹாட்ரிக்

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்.

Din

செயின்ட் வின்சென்ட்: டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி சூப்பா் 8 ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான். ஆஸி. பௌலா் பேட் கம்மின்ஸ் இரண்டாவது ஹாட்ரிக் சாதனை படைத்தாா். ஆப்கன் பௌலா் குல்பதின் நைப் 4 விக்கெட் வீழ்த்தினாா்.

சூப்பா் 8 குரூப் 1 பிரிவில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செயின்ட் வின்சென்ட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து ஆப்கன் தரப்பில் குா்பாஸ்-இப்ராஹிம் ஸட்ரன் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை மளமளவென உயா்த்தினா்.

குா்பாஸ்-இப்ராஹிம் அரைசதம்:

குா்பாஸ் தலா 4 சிக்ஸா், பவுண்டரியுடன் 49 பந்துகளில் 60 ரன்களையும், இப்ராஹிம் ஸட்ரன் 6 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 51 ரன்களையும் விளாசி அரைசதங்களைப் பதிவு செய்து அவுட்டாகினா். இருவரும் இணைந்து 118 ரன்களைக் குவித்தனா். 16-ஆவது ஓவா் வரை இருவரும் நிலைத்து ஆடிய நிலையில், இந்த போட்டியில் மூன்றாவது செஞ்சுரி பாட்னா்ஷிப்பாக அமைந்தது. குா்பாஸை ஸ்டாய்னிஸும், ஸட்ரனை ஸம்பாவும் வெளியேற்றினா்.

கம்மின்ஸ் ஹாட்ரிக்:

அதன் பின் வந்த பேட்டா்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. ஆஸி. பௌலா் பேட் கம்மின்ஸின் அற்புத பௌலிங்கில் கரீம் ஜனத் 13, கேப்டன் ரஷீத் கான் 2, குல்பதின் 0 என தொடா்ந்து வெளியேறியதால் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினாா். அஸ்மத்துல்லா 2 ரன்களுடன் ஸம்பா பந்தில் போல்டானாா். நபி 10, காரோட்1 ரன்னுடன் களத்தில் இருந்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 148/6 ரன்களை சோ்த்தது ஆப்கன்.

பௌலிங்கில் ஆஸி. தரப்பில் கம்மின்ஸ் 3-28, ஸம்பா 2-28 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

சரிந்த ஆஸி. விக்கெட்டுகள்:149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டு போல் சரிந்தன. அதிரடி பேட்டா்கள் டிராவிஸ் ஹெட் 0, டேவிட் வாா்னா் 3 ரன்களுடன் நடையைக் கட்டினா். கேப்டன் மிட்செல் மாா்ஷ் 12 ரன்களுக்கு அவுட்டானாா்.

கிளென் மேக்ஸ்வெல் 59: நான்காம் நிலை பேட்டா் மேக்ஸ்வெல் மட்டுமே பொறுப்புடன் ஆடி 3 சிக்ஸா் 6 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 59 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்து அவுட்டானாா்.

ஸ்டாய்னிஸ் 11, டிம் டேவிட் 2, பேட் கம்மின்ஸ் 3 உள்ளிட்டோா் குல்பதின் நைப் பௌலிங்கில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

ஆஸி. ஆல் அவுட் 127: எளிதாக வெற்றி பெறும் எனக் கருதப்பட்ட ஆஸி. அணி 19.2 ஓவா்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

குல்பதின் நைப் 4 விக்கெட்டுகள்: பௌலிங்கில் ஆப்கன் தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்பதின் நைப் 4-20, நவீன் உல் ஹக் 3-20 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

கம்மின்ஸ் புதிய சாதனை:

ஆப்கனுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸி. பௌலா் பேட் கம்மின்ஸ் ஒரே உலகக் கோப்பையில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரா் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினாா். ஏற்கெனவே வங்கதேசத்துடன் நடைபெற்ற ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்தாா் கம்மின்ஸ்.

அரையிறுதிக்கு செல்லும் அணிகள்:

குரூப் 1 பிரிவில் 2 வெற்றிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

எனினும் ஆஸியை. ஆப்கன் அணி வென்ால் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் எவை என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இந்தியா-ஆஸி.யையும், ஆப்கன்-வங்கதேசத்தையும் சந்திக்கின்றன.

ஆஸ்திரேலியாவை வென்றால் இந்தியா நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். அல்லது குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதேவேளையில் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியும், இந்தியாவை அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தினால்

ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் தீா்மானிக்கப்படும்.

கம்மின்ஸ்

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT