டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் விளையாடிய ஆப்கன் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/6 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் குல்பதீன் நைப் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் ஐந்து ஓவர்களில் 35 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்த ஆப்கன் அணிக்கு ஆறாவது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது.
பவர்பிளே முடிவில் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணியை குல்பதீன் நைப் தனது அதிரடியான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீட்டார்.
குல்பதீன் நைப் 63 ரன்களில் இருக்கும்போது ரச்சின் ரவீந்திரா வீசிய பந்தில் ஆட்டமிழக்க ஆப்கன் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஆப்கானிஸ்தான் ஸ்கோர்போர்டு
ரஹ்மானுல்லா குர்பாஸ் - 27
இப்ராஹிம் ஸத்ரான் - 10
குல்பதின் நைப் - 63
செடிகுல்லா அடல் - 29
தர்வீஷ் ரசூலி - 20
அஸ்மத்துல்லா ஒமர்சாய் - 14
முகமது நபி -10*
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.