டி20 உலகக் கோப்பை: ஆப்கனுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த யுஏஇ!
ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான போட்டி பற்றி...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 161 ரன்களை இலக்காக ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. தில்லியில் உள்ள திடலில் குரூப் டி-ல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சோஹைப் கான் 68 ரன்களும், அலிஷான் ஷாராஃபு 40 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.