முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: அஸ்மதுல்லா அசத்தல்; ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 16 பிப்ரவரி 2026, 2:55 pm IST
- படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, ஐக்கிய அரபு அமீரகம் முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஹைப் கான் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அலிஷான் ஷராஃபு 40 ரன்களும், சையத் ஹைதர் மற்றும் ஹைதர் அலி தலா 13 ரன்களும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஜீப் உர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளையும், ரஷீத் கான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி!

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிபட்சமாக இப்ரஹீம் ஸத்ரன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். டார்விஸ் ரசூலி 33 ரன்கள் எடுத்தார்.

ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் ஜூனைத் சித்திக் மற்றும் முகமது அர்ஃபான் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது ஜாவதுல்லா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அஸ்மதுல்லா ஓமர்ஸாய்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Afghanistan won the T20 World Cup match against the United Arab Emirates by 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.