FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

479 ரன்களை நோக்கி ஆப்கானிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தான், 479 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடி வருகிறது...

13 அக்டோபர் 2026, 3:58 am IST
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் (கோப்புப் படம்)
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தான், 479 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடி வருகிறது.

இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 240 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

இதையடுத்து 106 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 372 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது. லிட்டன் தாஸ் சதம் விளாசினாா்.

Advertisement

Advertisement

இறுதியாக, 479 ரன்களை நோக்கி விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், 4-ஆவது நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. செதிகுல்லா அடல் 35, ஹஸ்மதுல்லா ஷாஹிதி 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகளை கொண்டு 347 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments