FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவீர்களா? ரோஹித் சர்மா பதில்!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

10 செப்டம்பர் 2026, 4:38 pm IST
ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ
பகிர்:

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராகும் விதமாக அனைத்து அணிகளும் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள்களாக தொடர்கிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன எனவும், அப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலளித்ததாவது: அக்டோபர் 2027 இங்கிருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. அதனால், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவேனா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என பதிலளித்தார்.

அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா சதம் விளாசியிருந்த நிலையில், ரோஹித் சர்மா மிகவும் நன்றாக விளையாடி வருவதாக பிசிசிஐ தலைவர் தேவ்ஜித் சாய்கியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian captain Rohit Sharma has spoken about playing in the ODI World Cup tournament scheduled for next year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments