ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டிதான் கடைசி ஆட்டமா?
லார்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டியுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறப்போவதைப் பற்றி...
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கார்டிஃபில் நடைபெற்றது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து முதலில் விளையாடி, 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
Advertisement
Advertisement
அதனைத்தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்தப் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுத்தார்.
39 வயதான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சரியாக சோபிக்காத ரோஹித் சர்மா, அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால், லார்ட்ஸில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து சொதப்பி வரும் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், இந்திய அணியின் தேர்வர் குழுத் தலைவர் அஜித் அகர்கரும் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக 3 இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அணித் தேர்வர்கள் ஆர்வமாக உள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு சுமார் 20 போட்டிகள் உள்ளன. அந்த 20 போட்டிகளிலும் ஜெய்ஸ்வாலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
தற்போது 39 வயதாகும் ரோஹித் சர்மா, உலகக் கோப்பையின் போது 41 வயதை எட்டிவிடுவார். அவரது உடற்தகுதியும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் அணித் தேர்வர்களுக்கு தலைவலியாக அமைந்திருக்கிறது.
2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபிகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் முடிவு குறித்து அவரே முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 62 அரைசதங்கள் மற்றும் 33 சதங்கள் விளாசியிருக்கிறார். மேலும், மூன்று இரட்டைசதங்களும் விளாசியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் விளாசியவர் (264*) என்ற சாதனையும் ரோஹித் சர்மா வசமே இருப்பது நினைவுகூரத்தக்கது.
The third ODI against England at Lord's on Sunday could be Rohit Sharma's final match for India, with the national selection committee unlikely to retain the veteran opener beyond the ongoing UK tour, according to a PTI report.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.