ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும்: பிசிசிஐ துணைத் தலைவர்
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அணிகள் பலவும் தங்களுக்குள் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பிறகு இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக நாங்கள் சென்றிருந்தோம். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் அண்மையில்தான் நிறைவடைந்தது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்காக இந்திய அணி தயாராக வேண்டும். அதற்கான வேலைகளில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடர்கள் நிறைவடைந்தவுடன் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்.
அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்திய அணி வீரர்கள் முழுவதும் தயாராக உள்ளார்கள். ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும். அணியில் புதுமுக வீரர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
BCCI Vice-President Rajeev Shukla has stated that the Indian team will win the title at the ICC ODI World Cup scheduled for next year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.