இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலுவாக திரும்பி வருவோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வியினால், இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வலுவாக திரும்பி வருவோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களுக்கு மிகப் பெரிய போட்டி காத்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால், கடினமான சூழல்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரியும். அதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். எங்களது திறமையின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார்.
சூப்பர் 8 சுற்றில் தனது கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நாளை (ஜூன் 24) இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.